Home செய்திகள்உலக செய்திகள் ராகுல் டிராவிட்…என் பயோபிக் படமாக்கப்பட்டால் நானே நடிப்பேன்…!!!

ராகுல் டிராவிட்…என் பயோபிக் படமாக்கப்பட்டால் நானே நடிப்பேன்…!!!

by Sathya Deva
0 comment

2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராகச் இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. உலகக்கோப்பையுடன் தனது பதவிக்காலத்தை முடித்துள்ள ராகுல் டிராவிட் மும்பையில் நடந்த கிரிக்கெட் வீரர்களுக்கான  தனியார் விருது விழாவில் தனது பயோபிக் படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். சமீப காலமாக விளாயாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாக எடுப்பது டிரண்ட் ஆகி வருகிறது. டோனி தொடங்கி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள யுவராஜ் சிங் பயோபிக் வரை இந்த டிரண்ட் தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில் விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ட்ராவிட் -இடம், உங்களின் பயோபிக் படமாக்கப்பட்டால் யாரை உங்களின் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்ந்தெடுப்பீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சிரித்தபடி பதிலளித்த டிராவிட், நல்ல சம்பளம் கொடுத்தால் நானே எனது பயோபிக்கில் நடித்து விடுகிறேன் என்று தெரிவித்தார். இதனால் விருது அரங்கம் சிரிப்பலையில் ஆழ்ந்தது. தொடர்ந்து பேசிய டிராவிட் நாடு முழுவதும் பயணித்து ரசிகர்களின் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும்அனுபவிக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார். 

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.