செய்திகள் மாநில செய்திகள் ராஜஸ்தான் மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது….எந்த பாதிப்பும் இல்லை…!! Sathya Deva22 July 20240135 views ராஜஸ்தான் மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த ரயிலானது ஆழ்வார் ரயில் நிலையத்திலிருந்து ரேவாரி ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது மதுரா அருகே காலை 2.30 மணிக்கு தடம் புரண்டதாக கூறப்படுகிறது. இதில் 3 பெட்டிகள் பாதிப்படைந்துள்ளன. இதை எடுத்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் ஆழ்வார்- மதுரா வழித்தடங்கள் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். முன்னதாக உத்திர பிரதேசத்தில் மொராதாபாத் மாவட்டத்தில் சரக்கு ரயில் உள்ள 7 பெட்டிகள் தரம் புரண்டு விபத்து ஏற்பட்டதாகவும், மேலும் கடந்த 18 தேதி கோண்டா ரயில் நிலையம் அருகே சண்டிகர் -திப்ருகர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு அதில் 3 பேர் உயிரிழந்தாகவும் குறிப்பிடப்படுகிறது.