Home செய்திகள் ராஜஸ்தான் மாநிலம்…இரு மாணவர்கள் சண்டையிட்டு கத்தியால் குத்தியதால் பரபரப்பு…!!!

ராஜஸ்தான் மாநிலம்…இரு மாணவர்கள் சண்டையிட்டு கத்தியால் குத்தியதால் பரபரப்பு…!!!

by Sathya Deva
0 comment

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில உணவு இடைவெளியின் போது இரு மாணவர்கள் சண்டையிட்டு கொண்டதாகவும் அப்போது ஒரு மாணவன் பத்தாம் வகுப்பு மாணவன் மீது கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த மாணவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தை முன்பு திரண்டனர். இதனால் போலீசார் கத்தியால் குத்திய மாணவனையும் அவனது தந்தையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் கத்தியால் குத்திய மாணவன் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இருதரப்பினர்களுக்கும் இடையே பயங்கர மோதல்கள் ஏற்பட்டன. இதனால் பள்ளியில் அமைந்துள்ள மதுபன் பகுதியில் போராட்டக்காரர்கள் தீ வைத்தும் ஒருவருக்கு ஒருவர் கல் வீசியும் தாக்கு நடத்தியுள்ளனர். இந்த பிரச்சனை மதக்கலவரமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உதயபூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவை துண்டிக்கப்படுவதாக கூறப்படுகிறது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர அப்பகுதியில் போலீஸர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளன என கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.