செய்திகள் மாநில செய்திகள் ராஜஸ்தான் மாநிலம்…கணவனின் கொடூர செயல்…!!! Sathya Deva13 August 2024073 views ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தில் தனது சகோதரியை பார்க்க வேண்டும் பெண் தனது கணவனிடம் வற்புறுத்தியுள்ளார். அது கணவனுக்கு பிடிக்கவில்லை. கணவர் மறுத்தாலும் தனது சகோதரியை பார்க்க அவர் விரும்பியுள்ளார். இதனால் கோவமான கணவன், தனது மோட்டார் சைக்கிள் பின்புறத்தில் மனைவியின் கால்களை கட்டி இழுத்து சென்றுள்ளார். குடிப்பழக்கம் உள்ள கணவர் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியை அடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்துள்ளது. ய இதுகுறித்து யாரும் காவல்துறையில் புகார் கொடுக்கவில்லை. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.