செய்திகள் மாநில செய்திகள் ராஜஸ்தான் மாநிலம்…பாலியல் செய்த சிறுமியை திருமணம் செய்த நபர்…!!! Sathya Deva24 August 2024068 views ராஜஸ்தான் மாநிலம் பூந்தி மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு சேதன் என்ற இளைஞர் 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்முறை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது சிறுமியின் தந்தை தனது மகளை காணவில்லை என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பின்பு போலீசார் அந்த சிறுமியை மீட்டு சேதன் என்பவரை கைது செய்துள்ளது. அவர் ஜாமினில் வெளியே வந்து செய்தல் தன் பாலியல் செய்த அந்த சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாதை தொடர்ந்து திருமணம் செய்து உள்ளார். அந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு பூந்தி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட சேதனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 80 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார் என கூறப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வாதாரத்திற்காக அவருக்கு 4 லட்சம் ரூபாய் குற்றவாளி கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.