செய்திகள் மாநில செய்திகள் ராஜஸ்தான் மாநிலம்…மாணவனுக்கு கத்தி குத்து..போராட்டக்காரர்கள் தாக்குதல்…!!! Sathya Deva18 August 2024067 views ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவனை சக மாணவன் கத்தியால் குத்திய சம்பவத்தால் அங்கு கலவரம் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த மாணவனைப் பள்ளி நிர்வாகத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்த கலவரத்தில் கத்தியால் குத்திய மாணவன் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அங்கே இரு தரப்பினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது இதனால் பள்ளியில் அமைந்துள்ள மதுபன் பகுதியில் உள்ள வாகனங்களை போராட்டக்காரர்கள் தீ வைத்தும் கல் வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தப் பிரச்சனை மத கலவரமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உதய்புரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தினால் ராஜஸ்தானில் பள்ளி மாணவர்களுக்கு கூர்மையான பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்க பட்டுள்ளதாக கல்வி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் ஆசிரியர்கள் தினமும் மாணவர்களின் புத்தகப் பைகளை சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதில் கத்தியால் குத்திய மாணவன் மற்றும் அவரது தந்தையை போலீசாய் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மாணவனின் குடும்பம் குடியிருந்த வீட்டை மாவட்ட நிர்வாகம் ஜேசிபி எந்திரங்களால் பிரித்து தரமட்டம் ஆக்கியுள்ளது. இந்த பிரச்சனை ஓயாத நிலையில் மாணவனின் வீட்டை இடித்த சம்பவம் மேலும் மோசமான சூழ்நிலை உருவாகும் என குறிப்பிடப்படுகிறது.