ராஜஸ்தான் விரைவு ரெயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் ரெயிலில் உள்ள குப்பைகளின் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ராஜ்தானி விரைவு ரெயிலின் பரிதாப நிலை இது. ரெயிலில் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது. இது எங்களின் மகிழ்ச்சியான பயணத்தை கெடுத்துவிட்டது. சாதாரண ரெயில் பெட்டிகளை விட பாத்ரூமின் நிலை மிக மோசமாக உள்ளது. நான் 12000 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து நரக வேதனை அடைந்தேன்.ரெயில் சுத்தமாக இல்லை. ரெயில் பெட்டிகளுக்குள் அனுமதியில்லாமல் சிலர் பொருட்களை விற்கின்றனர். பிச்சைக்காரர்கள் பிச்சை எடுக்கின்றனர்.
மொத்தத்தில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. ரெயில் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால் எனது மகன் தற்போது நோய்வாய்ப்பட்டுள்ளான். பிரதமர் மோடி அவர்கேள தயவு செய்து இதை சரிசெய்யுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவில், இந்திய ரெயில்வே துறை, ரெயில்வே அமைச்சர் மற்றும் பிரதமர் மோடியை அவர் டேக் செய்துள்ளார். இந்த பதிவிற்கு பதில் அளித்துள்ள ரெயில்வே, உங்களது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.