Home செய்திகள் ராணுவ வீரரை தாக்கிய போலீசார் …சட்டப்படி நடவடிக்கை…!!!

ராணுவ வீரரை தாக்கிய போலீசார் …சட்டப்படி நடவடிக்கை…!!!

by Sathya Deva
0 comment

காஷ்மீரில் பணியாற்றி வந்த ராணுவ வீரர் ஒருவர், சொந்த வேலையாக ஜெய்ப்பூர் வந்துள்ளார். அவரை எந்த காரணமும் இன்றி சாஸ்திரி பாத் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்துள்ளனர். அங்கு அவரை நிர்வாணப்படுத்தி, அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். மேலும் அவரிடம் ராணுவத்தைக் குறித்துத் தரக்குறைவாகப் பேசியுள்ளனர். இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

அப்போது அம்மாநில தொழில் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு நேரில் சென்று அங்கிருந்த போலீசாரை அவர்களின் தரக்குறைவான செயலுக்காகக் கண்டித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ராணுவ வீரர் அடித்துத் துன்புறுத்தப்பட்டது மருத்துவ அறிக்கையில் உறுதியாகியுள்ளது, போலீசின் செயல் ஏற்றுக்கொள்ளமுடியாதது, சட்டத்தை மீறிய அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.