ராயன் பட இயக்குனருக்கு நன்றி தெரிவித்த பிரகாஷ்ராஜ்… வைரலாகும் பதிவு…!!!

நடிகர் தனுஷ் அவரின் 50வது படமான ”ராயன் படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. கடந்த 26 ஆம் தேதி ரிலீசான இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ”இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், இந்த படத்தின் இயக்குனர் தனுஷுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி.” என பதிவிட்டுள்ளார்.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?