ரிஷபம் ராசிக்கு…! உயர்வான வாழ்க்கைக்கு தங்களை தயார் படுத்திக் கொள்வீர்கள்…!! நிதி உதவி கிடைக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.

இஷ்ட தெய்வம் அருளும் துணையாக இருக்கும். நன்மைகள் நடக்கக்கூடிய காலகட்டம் என்று சொல்ல முடியும். இயற்கை சூழலுடன் இயல்பாக வாழ்க்கை நடத்துவீர்கள். அதிகாரம் மிக்க செயல்களை செய்து பாராட்டு வாங்குவீர்கள். காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். புதிய பொருள் சேர்க்கை இருக்கும். எதிலும் கவனமாக இருந்து பணிகளை மேற்கொள்வது நல்லது. அக்கம் பக்கத்தில் சில்லறை சண்டை ஏற்பட்டு சரியாகும். எதையும் சமாளிக்கும் மனநிலை உண்டாகும். தொழில் உங்களுக்கு அடுத்த கட்டத்திற்கு சிறப்பாக செல்லும். தொழில் தொடர்பான முன்னேற்றங்கள் செய்வீர்கள். சிறு சிறு தடங்கள் ஏற்பட்டாலும் எல்லாம் சரியாகும். நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கண்டிப்பாக. குடும்பத்தில் நிம்மதி குறையும்படி சூழல் உண்டாகி சரியாகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பெண்கள் முன்கோபம் பட வேண்டாம். எதையும் யோசித்து செயல்படுத்த வேண்டும். முயற்சியின் பெயரில் முன்னேற்றம் உண்டாகும். காதல் போன்ற விஷயத்தில் தெளிவு வேண்டும். மாணவர்கள் சூழ்நிலை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

கல்வியில் ஏற்பட்ட சிரமங்களை சரி செய்வீர்கள். மாணவர்கள் விளையாடும் பொழுது கவனமாக விளையாட வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஒன்று மற்றும் மூன்று. அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! செல்வம் உங்களுக்கு சேரும்…! இனிமையான செயல்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! சந்தான பாக்கியம் இருக்கும்…! உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உதவியாக இருப்பார்கள்…!!

மகரம் ராசிக்கு…! பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும்…! செல்வ போக வாழ்க்கை அமையும்…!!