ரிஷபம் ராசி அன்பர்களே…! பார்த்து பக்குவமாக அனைவரிடத்திலும் பழக வேண்டும்.
குழப்பமில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சில சூழல்களில் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். எதிலும் குழப்பம் அடைய வேண்டாம். நல்லது கெட்டதுகளில் ஈடுபடுத்தி கொள்வீர்கள். நல்ல நண்பர்களை சேர்த்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்து தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பிரச்சனைகளில் ஞாபகமாக கையாண்டு வெற்றி காண முடியும். வாழ்க்கையில் ஏற்பட்ட சிரமங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும். பேச்சை அளவாக பேச வேண்டும். விழிப்புணர்ச்சி அதிகமாக தேவை. உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமை வேண்டும். விரும்பிய இடம் மாற்றம் கிடைக்கும். புதிய வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும்.
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெண்களுடைய நம்பிக்கை நிறைவேறும். பெண்களுக்கு இஷ்ட தெய்வ வழிபாடு இருக்கும். காதல் போன்ற விஷயங்களில் தெளிவு வேண்டும். காதல் கண்டிப்பாக வெற்றி நடை போடும். மாணவர்கள் வெயிலில் அதிகமாக செல்ல வேண்டாம். மாணவர்கள் சக அன்பர்களே அனுசரித்து செல்ல வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் இரண்டும் மற்றும் ஐந்து. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.