ரிஷபம் ராசி அன்பர்களே…! காரியங்கள் ஓரளவு சிறப்பாக கை கொடுக்கும்.
முயற்சியால் முன்னேற்றம் காண்பீர்கள். பிடித்தமான வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. யாரையும் எடுத்தறிந்து பேச வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் கொஞ்சம் வரும். வியாபாரத்தில் தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். போட்டி பொறாமைகள் உங்களை விட்டு விலகி செல்லும். உத்தியோகணி வருத்தமாக பயணங்கள் சென்று வருவீர்கள். முக்கிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். மதியத்திற்கு மேல் நல்ல செய்திகள் கண்டிப்பாக வரும். எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் முன்னேற்றம் கண்டிப்பாக கிடைக்கும். குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பணகஷ்டம் கொஞ்சம் குறையும். அக்குவமாக எடுத்து சொல்லி எதிரில் இருப்பவர்களை திருப்தி செய்வீர்கள். பல வழிகளில் ஏற்பட்ட தொல்லைகள் கண்டிப்பாக குறைந்து விடும். எந்த ஒரு வேலையும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும். இந்த நாளில் நிதி தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை கொஞ்சம் அனுசரித்து செல்வது நல்லது. உங்கள் அணுகு முறையில் கொஞ்சம் மாற்றங்கள் உண்டாகும். பெண்கள் உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள். நிர்வாக திறனை அதிகப்படுத்துவீர்கள். காரியங்களை கணக்கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு மனதடமாற்றம் குழப்பம் ஏற்பட்டது மாறும். காதலே பொருத்தவரை யோசித்து முடிவெடுங்கள்.
இல்லத்தில் எதையும் யோசித்துப் பேசுங்கள் அது மிக முக்கியம். மாணவர்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள். உற்சாகமாக எதிலும் ஈடுபடுவீர்கள். விளையாட்டுத்துறையில் வெற்றி காணும் சூழல் உண்டாகும். படித்த பாடங்களை எழுதி பாருங்கள். மாணவ கண்மணிகள் ஒரு முறைக்கு இருமுறை எதையும் யோசித்து பேசுவது மிக நல்லது. முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.