ரெயில் வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தை கடந்த பெண்…வைரல் வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப் படை போலீஸ்காரர் (RPF) ரெயில் வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்ணை காப்பாற்றினார். அந்த பெண்ணை அவர் காப்பாற்றிய வீடியோ பிளாட்பார்மில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. ஜல்கான் ரெயில் நிலையத்தில் ரெயில் நடைமேடை வர இருந்தபோது, ஒரு பெண் கையில் பையுடன் தண்டவாளத்தை கடந்து பிளாட்பாரத்தில் ஏற இருப்பதை போலீஸ்காரர் சாங்கோ பாட்டீல் பார்க்கிறார். அந்த பெண் பிளாட்பாரத்தில் ஏற முயன்றபோது, போலீஸ்காரர் வேகமாக அவரை நோக்கி ஓடிவருகிறார். அதற்குள் ரெயில் வேகமாக வந்துவிட்டது. https://twitter.com/i/status/1828995194324185111

அந்த பெண் ரெயிலுக்கும் பிளாட்பாரத்துக்கு இடையில் சிக்கிக் கொண்டார். ரெயில் அந்த பெண்ணை சில மீட்டர்கள் இழுத்துச் சென்றது. உடனே துரிதமாக செயல்பட்ட போலீஸ்காரர் வேகமாக ஓடிவந்து அந்த பெண்ணை பிளாட்பாரத்திற்கு இழுத்து காப்பாற்றினார். பின்னர் போலீசார் அந்த பெண்ணை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!