Home சினிமா செய்திகள் “ரொம்ப பெருமையா இருக்கு தம்பி”!… “ராயன்” படம் குறித்து செல்வ ராகவன் பதிவு…!!!

“ரொம்ப பெருமையா இருக்கு தம்பி”!… “ராயன்” படம் குறித்து செல்வ ராகவன் பதிவு…!!!

by Sowmiya Balu
0 comment

நடிகர் தனுஷ் அவரின் 50வது படமான ”ராயன் படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள இந்த படம் குறித்து செல்வராகவன் தனது எக்ஸ் தள பக்கத்தில், ”ராயன் படம் பார்த்துவிட்டேன். அற்புதமாக இருக்கிறது. இயக்குனராகவும் நடிகராகவும் தனுஷ் அசத்தியுள்ளார். உன்னை நினைத்து மிகவும் பெருமையா இருக்கு தம்பி. அனைத்து நடிகர்களின் பணியையும் ரசித்தேன். ஒட்டுமொத்த குழுவிற்கு மகிழ்ச்சி அடைகிறேன்” என கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.