லண்டன்… விமான பணிப்பெணுக்கு நடந்த பாலியல் வன்முறை…!!!

லண்டனில் ஹீத்ரோவ் பகுதியில் உள்ள ரெடிஷன் ரெட் ஹோட்டலில் ஏர் இந்தியா விமான பணிக்குழுவினர் தங்கியுள்ளனர். அன்று இரவு 1.30 மணி அளவில் விமான பணிப்பெண் ஒருவரின் அறைக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் பெண் தூக்கத்தில் இருந்து விழித்துப் பார்க்கும்போது அந்த நபரை கண்டு அலறியுள்ளார். இதனால் அந்த நபர் துணிகளை தொங்கவிடும் ஹேகர்களால் கடுமையாக தாக்கியுள்ளார். அந்தப் பெண் அறையை விட்டு வெளியேற முயற்சித்த நிலையில் அந்தப் பெண்ணை தரதரவென இழுத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு அந்த நபர் அந்தப் பெண்ணை தாக்கி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. பின்பு ஹோட்டலில் இருந்தவர்கள் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றன. இந்த சம்பவத்தினால் ஹோட்டல் நிர்வாகத்திற்கு ஏர் இந்திய நிறுவனம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட பெண் இரவில் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!