செய்திகள் மாநில செய்திகள் லவ் ஜிகாத் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை…முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா….!!! Sathya Deva5 August 20240100 views லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்து பெண்கள் திருமணத்தின் மூலம் மதமாற்றப்படுவதாக பாஜகவினர் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் பாஜக ஆட்சி புரியும் உத்தர பிரதேசத்தில் லவ் ஜிகாத்திற்கு எதிராக யோகி அரசு சட்டம் இயற்றியுள்ளது. மேலும் அசாம் மாநிலத்தில் லவ் ஜிகாத் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேஸ்புக்கில் இந்து பெயர்களை வைத்துக்கொண்டு இந்து பெண்களை கவர்ந்து சிலர் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்துக்கு பிறகு தான் அந்தப் பையன் இந்து இல்லை என்பது அந்த பெண்ணிற்கு தெரிய வருகிறது. இப்படி பாதிக்கப்படும் பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.