உலக செய்திகள் செய்திகள் வங்காளதேசம்…அவாமி லீக் கட்சிக்கு சொந்தமானஹோட்டலுக்கு தீ வைப்பு …24 பேர் பலி…150 பேர் காயம் Sathya Deva6 August 20240118 views வங்காளதேசம் நாட்டில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் திடீரென ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டத்தை ஷேக் ஹசீனா பக்கம் திருப்பினார். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. பின்பு ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியாவில் தங்கியுள்ளார். எனவே இடைக்கால அரசு அமைப்பதாக வங்காளதேசம் ராணுவம் கூறியுள்ளது. இதற்கிடையே போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு சொந்தமான சொத்துக்களை சூறையாடி வருகின்றனர். அந்தக் கட்சிக்கு சொந்தமான ஹோட்டல் தீ வைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ஹோட்டலுக்குள் இருந்த 24 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு போராட்டக்காரர்களின் வன்முறை அதிகமாகி வருகிறது என கூறப்படுகிறது.