வங்காளதேசம்…கலீதா ஜியாவை விடுதலை செய்ய உத்தரவு…!!!

வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும் ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். மேலும் வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரான கலீதா ஜியாவுக்கு 2018 ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் 17 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கலீதா ஜியாவை விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார் என கூறப்படுகிறது. வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் வங்காளதேசம் பாராளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது. மேலும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 வரை கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் அதிபர் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!