உலக செய்திகள் செய்திகள் வங்காளதேசம்…நாடு திரும்பிய 6700 இந்திய மாணவர்கள்….!!! Sathya Deva26 July 2024046 views பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971 இல் நடந்த போரில் பங்கேற்ற வங்காள தேசத்தின் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்திற்கு அரசு வேலை வாய்ப்புகளின் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த படைவீரர் இட ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என டாக்காவில் உள்ள ஜஹாங்கிர் நகர் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை எதிர்த்து ஆளும் அவாமி லீக்கட்சி மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இரு தரப்பினர்களுக்கு இடையே நடந்த மோதல் வன்முறையில் முடிந்தது. இந்தப் போராட்டத்தால் போலீசார் கன்னி புகை குண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. வங்காளதேசம் தற்போது வன்முறையால் பாதிக்கப்பட்டதால் 6,700 இந்திய மாணவர்கள் தங்கள் நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.