உலக செய்திகள் செய்திகள் வங்காளதேசம் மக்களுக்கு… மம்தா பானர்ஜி வேண்டுகோள்…!!! Sathya Deva5 August 2024099 views வங்காளதேசம் நாட்டின் இட ஒதுக்கீடு தொடர்பாக உண்டான மாணவர்கள் போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மீண்டும் வன்முறை ஏற்பட்டது. இதனால் பிரதமர் ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் மீண்டும் லண்டன் புறப்பட்டு செல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் ராணுவம் இடைக்கால அரசை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து மம்தா பானர்ஜி அவர்கள் கூறுகையில் வங்காள மக்கள் அமைதி காக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். எந்தவிதமான வதந்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இது இரு நாடுகளுக்கு இடையான விஷயம் மத்திய அரசு முடிவு எடுக்கும் எந்த முடிவையும் நாங்கள் ஆதரிப்போம் என்று கூறியுள்ளார். மேலும் இந்த பிரச்சனை எப்படி அணுகுவது என்பது குறித்து இந்திய அரசு முடிவு செய்யும் என்றும் வங்காள தேசத்தின் அமைதியை சீர் குலைக்கும் வகையில் ஆத்திரமூட்டும் கருத்துகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார் என மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.