உலக செய்திகள் செய்திகள் வங்காளதேசம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது…10 நாட்களுக்கு பின் இணையசேவை..!!! Sathya Deva29 July 2024033 views வங்காளதேசத்தில் கடந்த 15ம் தேதி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகங்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் 30 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு எதிராக ஆளுங்கட்சியின் மாணவர்கள் அணி பிரிவு போராட்டம் நடத்தியது. இதனால் மாணவர்களுக்கும் போலீசார்க்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன் பின் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறை நாடு முழுவதும் பரவியது. மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் டிவி நிலையங்களுக்கு தீ வைப்பு, வாகனங்களுக்கு தீவைப்பு என பொது சொத்துக்களை சேதப்படுத்தினர். இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்று விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு அலுவலகங்களும் மூடப்பட்டன என கூறப்படுகிறது. வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீது கண்டதும் சுட உத்தரவு தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டது. இந்த பிரச்சினையால் வேலைவாய்ப்பில் சுதந்திரப் போராட்ட குடும்பத்திற்கு வழங்கும் 30 சதவீதம் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. இதை எடுத்து வங்காளதேசம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இந்நிலையில் வங்காளதேசத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக முடக்கப்பட்டிருந்த இணையை சேவை மீண்டும் அளிக்கப்பட்டது என தொலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.