உலக செய்திகள் செய்திகள் வங்காளதேசம் வன்முறை…நாடு திரும்பிய 205 இந்தியர்கள்…!!! Sathya Deva7 August 20240116 views வங்காளதேசத்தில் ஏற்பட்ட வன்முறையால் அங்கு உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் வங்காளதேசத்தில் இருந்து இந்தியர்களை மீட்டுக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஏர் இந்தியா சிறப்பு விமானம் நேற்று இரவு வங்காளதேச தலைநகர் டாக்காவுக்கு சென்றடைந்தது. அங்கு இருந்த 6 குழந்தைகள் மற்றும் 205 இந்தியர்களுடன் புறப்பட்ட சிறப்பு விமானம் இன்று காலை டெல்லி வந்து அடைந்ததாக கூறப்படுகிறது. டெல்லியில் இருந்து டாக்காவிற்கு இயக்கப்படும் இரண்டு விமானங்களை தவிர இந்திய குடிமக்களை அழைத்து வர ஏர் இந்தியா சிறப்பு விமானங்களையும் இயக்கலாம் என்று தெரிவித்திருக்கிறது. இதேபோல் விஸ்தாரா, இண்டிகோ ஆகிய விமான நிறுவனங்களும் தங்களது விமான சேவையை மீண்டும் வங்காளதேசத்திற்கு இயக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.