உலக செய்திகள் செய்திகள் வங்காளதேசம் விவகாரம்…சசி தரூர் பேட்டி…!!! Sathya Deva12 August 2024034 views வங்காள தேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் பெரிய அளவில் வன்முறையாக வடித்து ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை விட்டு விலகினார். இதனால் முகமது யூனஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றதாக கூறப்படுகிறது. வங்காள தேசத்தை ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமை தொடர்பாக காங்கிரஸ் எம்பி சசி தரூர் பேட்டியளித்தார். அதில் முகமது யூனஸ் குறித்து எனக்கு தெரியும். அவர் பாகிஸ்தானை விட அமெரிக்காவுடன் நெருக்கமாக இருப்பவர் என்று கூறினார். தற்போது வங்கதேசத்தில் பதவியேற்றியுள்ள இடைக்கால அரசை பார்க்கையில் நமக்கு விரோதமான நாடுகளை குறித்து இந்திய கவலை கொள்வதற்கு எந்த காரணமும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் இவர் ஷேக் ஹசீனா இந்தியாவின் நண்பர், உங்களின் நண்பர் ஒருவர் ஆபத்தில் இருக்கும்போது அவருக்கு உதவ வேண்டும் அதை தான் இந்தியா தற்போது செய்தது என கூறியுள்ளார். அவர் இந்தியாவில் எத்தனை நாட்கள் இருப்பார் என்று நமக்கு தெரியவில்லை எனவே வீட்டிற்கு வந்த விருந்தாளியே நீங்கள் எப்போது கிளம்புகிறீர்கள் என்று நாம் கேட்கக்கூடாது என்பதையும் தெளிவுப்படுத்தினார். வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்று முகமது யூனஸ் உறுதியளித்தார் என்று சசிதரூர் தெரிவித்துள்ளார்.