Home செய்திகள்உலக செய்திகள் வங்காளதேசம்… ஷேக் ஹசீனாவை நாடு கடத்த எதிர்க்கட்சியினர் வலியுறுத்தல்…!!!

வங்காளதேசம்… ஷேக் ஹசீனாவை நாடு கடத்த எதிர்க்கட்சியினர் வலியுறுத்தல்…!!!

by Sathya Deva
0 comment

வங்காளதேசத்தில் அரசு வேலைகளில் சுதந்திர போராட்ட வாரிசுகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் 600-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதையடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்த நிலையில் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று வங்காளதேச முக்கிய எதிர்க்கட்சியான பி.என்.பி கட்சி இந்தியாவிடம் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து பி.என்.பி கட்சியின் பொதுச்செயலாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் கூறியதாவது:- ஷேக் ஹசீனாவை வங்காளதேச அரசாங்கத்திடம் சட்டப்பூர்வமாக ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு கோரிக்கை விடுக்கிறோம். அவர் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். இதனால் விசாரணையை அவர் எதிர்கொள்ளட்டும். ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைய அனுமதிக்கப்படுவது ஜனநாயகக் கொள்கைகளை நிலை நிறுத்துவதற்கான நாட்டின் உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகவில்லை.

ஷேக் ஹசீனாவின் குற்றங்களை மக்கள் சிறியதாக கருதவில்லை. அவரது ஆட்சி வங்காளதேசத்தின் சுதந்திரத்தை பலவீனப் படுத்தியது. கடந்த 15 ஆண்டுகளாக நாட்டின் முன்னேற்றத்தைத் தடுத்தது. அவரது தவறான ஆட்சியால் தேசத்துக்கு கடன் சுமை ஏற்பட்டது. நாட்டின் அனைத்து நிறுவனங்களும் அழிக்கப்பட்டன. வங்காளதேச மக்களின் எதிரிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதன் மூலம் இந்தியா, மக்களிடம் அதிக அன்பைப் பெற முடியும் என்று நான் நினைக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.