Home செய்திகள்உலக செய்திகள் வங்காள தேசத்தில்…இடைக்கால அரசுடன் அமெரிக்கா தொடர்பு…!!!

வங்காள தேசத்தில்…இடைக்கால அரசுடன் அமெரிக்கா தொடர்பு…!!!

by Sathya Deva
0 comment

வங்காள தேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் என குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியே ராஜினாமா செய்து விட்டு இந்தியாவின் தஞ்சம் அடைந்தார் எனக் கூறப்படுகிறது.

இதனால் இடைக்கால அரசு அமையும் என வங்காளதேச ராணுவ தளபதி அறிவித்தார். இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு பெற்ற முகமது யூனஸ் தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கோரிகையில் வங்காள இடைக்கால அரசுடன் அமெரிக்கா அரசு தொடர்பில் உள்ளது. இடைக்கால அரசின் தலைவர் முகமது யூசின் உடன் பதவி ஏற்பு விழாவில் அமெரிக்க தூதர் கலந்து கொண்டார் எனக் கூறுகிறார். வங்காளதேச மக்களுக்கு ஜனநாயகமான எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும் என இடைக்கால அரசிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.