உலக செய்திகள் செய்திகள் வங்காள தேசத்தில் போராட்டம் ஒய்ந்தது…மீண்டும் இணையதள சேவை…!!! Sathya Deva30 July 2024086 views வங்காள தேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையால் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வங்காள தேசத்தில் இணைய தள சேவை முடக்கப்பட்டது. மாணவர்கள் போராட்டத்தால் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இதனால் வன்முறை ஓய்ந்ததால் வங்காளதேசத்தில் இணையதள சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கூறும்போது இணையதளம் மற்றும் மொபைல் இணைய இணைப்பு தற்போது முழு செயல்பாட்டுடன் மீட்டமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.