வங்காள தேசத்தில் வன்முறை…எல்.ஐ.சி அலுவலகம் இன்று மூடப்பட்டது…!!!

வங்காள தேசத்தில் அரசுக்கு எதிரான வன்முறை போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர், இந்த வன்முறையால் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், இதனால் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன் நாட்டை விட்டு வெளியேறி ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இந்தியாவிற்கு வந்துள்ளார். அங்கிருந்து லண்டன் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் வங்காளதேசத்தில் போராட்டம் தொடர்வதாலும் சமூக அரசியல் பதற்றம் அதிகரிப்பதாலும் டாக்காவில் செயல்பட்டு வந்த எல்.ஐ.சி அலுவலகம் இன்று மூடப்பட்டது. ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் வரும் 7ம் தேதி வரை எல்.ஐ.சி அலுவலகம் மூடப்பட்டிருக்கும் என எல்.ஐ. .சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் காரணமாக இந்தியா-வங்காள தேசம் எல்லை முழுவதும் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!