வடகொரியா நாட்டு அதிபர் கிங் ஜாங் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது அவர் உடல் எடை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய் உள்ளிட்ட பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. அவரது அதிகாரிகள் வெளிநாட்டில் புதிய மருத்துவர்களை கொண்டு வர முயற்சி செய்கிறார்கள் என தென்கொரியாவின் உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவர் 2021 ஆம் ஆண்டு தனது உணவே மாற்றி அமைத்த கிம் ஜாங் உடல் எடையை குறைத்தார். ஆனால் தற்போது உடல் எடை மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அதிபர் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாகவும் தனது 12 வயது மகளை நாட்டில் அடுத்த அதிபராக மாற்ற திட்டமிட்டு இப்போதே பயிற்சி அளித்து வருகிறார் என்று தென்கொரியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.