வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவு… கீர்த்தி சர்மா என்ற இளைஞர் கைது…!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் பெண் மருத்துவருக்கு நடந்த பாலியல் வன்முறை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பெண் மருத்துவரின் தந்தை கூறுகையில் எனது மகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் உண்மையான குற்றவாளி கிடையாது என்றும் இந்த கொலைக்கு பின்னால் பெரிய கும்பல் உள்ளதாக கூறி இருந்தார். இந்தப் போராட்டம் 11 வது நாளாக நீடித்து வருகிறது.

இந்நிலையில் கீர்த்தி சர்மா என்ற இளைஞர் பிகாம் இரண்டாவது ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் மருத்துவர் கொலை தொடர்பாக பதிவிட்டிருந்தார். அவரது பதிவில் இந்திரா காந்தியை சுட்டு கொலை செய்தது போலவே முதல்வர் மம்தா பானர்ஜியை கொலை செய்ய வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். இவர் வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட காரணங்களால் அந்த மாணவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!