செய்திகள் மாநில செய்திகள் வயநாடு நிலச்சரிவு….ஆறுதல் கூறிய ராகுல் காந்தி…!!! Sathya Deva2 August 20240173 views கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா அவர்களும் இன்று பார்வையிட்டனர். அதன் பின் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் என் தந்தையே இழந்த போது எவ்வளவு துக்கமடைந்தேனோ அதை துக்கத்தில் தான் இப்போது இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த துயரமான நேரத்தில் மக்களுடன் இருப்பது மிகவும் அவசியம் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வந்து சேருவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் நிலச்சரிவு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை என்றும் ஒட்டுமொத்த மக்களும் வயநாடு மக்களுக்கு உதவ வேண்டும் என்று கூறினார். இவர் வயநாடு மக்களுக்கு உதவ நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். வயநாட்டில் மீண்டும் மீண்டும் நிலச்சரிவுகள் மற்றும் இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது மிகவும் கவலை அளிக்கிறது. இதற்கு விரைந்து ஒரு செயல் திட்டம் உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.