வயநாடு நிலச்சரிவு… உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 380-ஐ கடந்துள்ளதாக தகவல்…!!!

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி கொட்டி தீர்த்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர். வீடுகள் இடிந்தும் மரங்கள் வேரோடு சாய்ந்தும் தொடர் கனமழை போன்ற காரணங்களால் இன்னமும் முடிவுக்கு வராத சூழ்நிலையில் இருக்கிறது. மேலும் இன்று 6ம் நாளை எட்டிய மீட்பு பணிகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 380 கடந்துள்ளது என்று கூறப்படுகிறது.

மேலும் பலர் மண்ணில் புதைந்ததால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. குறிப்பாக சூழல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் இருந்து உடல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. மீட்பு பணியின் போது அந்த பகுதிகளில் உடல்கள் எதுவும் கிடைக்காவிட்டால் நாளையுடன் மீட்பு பணிகளை நிறுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் மாயமானவர்களின் எண்ணிக்கை 180 ஆக உள்ள நிலையில் ரேடர், ட்ரோன் மூலம் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என குறிப்பிடுகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!