செய்திகள் மாநில செய்திகள் வயநாடு நிலச்சரிவு….காங்கிரஸ் சார்பில் 100 வீ டுகள் கட்டி தரப்படும்…!!! Sathya Deva2 August 20240130 views வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறினார்கள். இதில் இந்திய காங்கிரஸ் அமைப்பு செயலாளர் கே.சி வேணுகோபால், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், கேரளா எதிர்க்கட்சித் தலைவர் சதீசன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பி.விஸ்வநாதன் மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இவர்கள் ஆலோசனை செய்யும் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வகையில் உதவலாம் என்று விவாதித்தனர். இதை அடுத்து காங்கிரஸ் சார்பில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக் கொடுக்க முடிவு செய்தனர். ஒரே இடத்தில் இடம் வாங்கி அதில் ஒரு குடியிருப்பு போல் வீடுகளை கட்டவும் ஒவ்வொரு வீடும் தலா 8முதல் 10 லட்சம் செலவில் கட்டவும் திட்டமிட்டு உள்ளார்கள். இந்த கூட்டம் முடிந்ததும் ராகுல் காந்தி அவர்கள் கலெக்டரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது நிலவரம் மற்றும் மீட்பு பணிகள் பற்றியும் கேட்டறிந்தார்.