வயநாடு நிலச்சரிவு…தமிழ் திரையுலகினர் சார்பில் நன்கொடை…!!!

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலர் நன்கொடை அளித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகர் விக்ரம் ரூ.20 லட்சமும், சூர்யா, கார்த்தி, ஜோதிகா இணைந்து ரூ.50 லட்சமும், நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து ரூ.20 லட்சமும் வழங்கினர். இந்நிலையில், தமிழ் திரையுலகினர் சார்பில், நடிகைகள் குஷ்பு, மீனா, சுஹாசினி, லிசி ஆகியோர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கி உள்ளனர்.

அது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் நடிகை குஷ்பு பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், “சென்னையைச் சேர்ந்த சிலர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவுடன் வயநாடு பேரிடர் நிவாரணத்திற்காக 1 கோடி ரூபாய் வழங்கினோம் என கூறியுள்ளார். இவர் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து காசோலையை வழங்கினோம் எனத் தெரித்துள்ளார். மேலும்உதவி செய்த அனைவருக்கும் நன்றி என கூறினார். இந்த பதிவில் வயநாடு மக்களுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!