செய்திகள் மாநில செய்திகள் வயநாடு நிலச்சரிவு…பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 லட்சம்…மந்திரி பிரனாயி விஜயன் அறிவிப்பு…!!! Sathya Deva14 August 2024081 views கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின. இந்த நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் உயிரே இழந்தனர். இதில் மண்ணுக்குள் புதைந்த மக்களை மீட்க காவல்துறை, தீயணைப்பு துறை போன்ற பல தரப்பினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரை பிரபலங்கள் நிதி உதவி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் வயநாடு நிகழ்ச்சிகளில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 6 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல் மந்திரி பிரனாயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 நிதி உதவி வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.