செய்திகள் மாநில செய்திகள் வயநாடு நிலச்சரிவு…பிரதமர் மோடி இன்று கேரளா வருகை…!!! Sathya Deva10 August 20240118 views கேரள மாநிலம் வயநாடு, சூரல்மலை, முண்டகை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் கடந்த மாதம் 30 ஆம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர் என கூறப்படுகிறது. இதில் பல பேர் மாயமாகிவிட்டனர். அவர்களைத் தேடும் பணியில் மீட்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கேரள முதல்மந்திரி பிரனாயி விஜயன், மத்திய மந்திரி சுரேஷ் கோபி உள்ளிட்ட பலர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் வயநாடு நிலச்சிரிவு பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று கேரளா சென்றடைந்தார் என கூறப்படுகிறது.