செய்திகள் மாநில செய்திகள் வயநாடு நிலச்சரிவு… பொது மக்களுக்கு அனுமதி இல்லை…!!! Sathya Deva20 August 2024062 views கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாத இறுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் முண்டகை, சூரல்மலை, மேம்பாடி, அட்டமலை, பூஞ்சிரித்தோடு மற்றும் வெள்ளரிமலை உள்ளிட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் இருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன. மேலும் இந்த கோர சம்பவத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 400 தாண்டியதாக கூறப்படுகிறது. இங்கு ராணுவ வீரர்கள் ,தீயணைப்பு வீரர்கள், போலீசார் என பல பேர் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்கள் நிலை என்ன என்று தற்போது தெரியவில்லை என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்தவர்கள் சில கட்டுப்பாடுகள் தளர்வு ஏற்பட்டதால் அந்த இடங்களை பார்ப்பதற்கு வரத் தொடங்கியுள்ளனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக முண்டகை மற்றும் சூரல்மலை பகுதிகளுக்கு பார்வையாளர்கள் செல்ல வயநாடு மாவட்டம் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இது குறித்து வயநாடு மாவட்ட கலெக்டர் மேகஸ்ரீ கூறுகையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல பல்வேறு படைகளை சேர்ந்த பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிக்கு தகவல் தெரிவித்து விட்டு செல்லலாம் மேலும் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வரும் பொது மக்களுக்கு சில அனுமதி இல்லை என கூறியுள்ளார்.