செய்திகள் மாநில செய்திகள் வயநாடு நிலச்சரிவு…15 வயது காட்டு யானை பலி….!!! Sathya Deva2 August 20240160 views கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டகை, சூழல்மலை, மேம்பாடி ஆகிய கிராமங்களின் கடந்த 30ஆம் தேதி அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளின் வனப்பகுதியில் வாழும் விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. காட்டு யானைகள், மான்கள் என பல விலங்குகள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டன. அவை அருகில் உள்ள சாலியாற்றில் தத்தளித்து சென்றதை உள்ளூர்வாசிகள் பார்த்து உள்ளனர். குறிப்பாக போத்துக்ககல் பகுதியில் உள்ள சாலியாற்றில் மான்கள் கூட்டம் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் நிலம்பூர் பகுதிகளில் மூன்று காட்டு யானைகள் சாலியாற்றில் தத்தளித்து சென்றன. இதில் 15 வயது காட்டு யானை இறந்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இது குறித்து வனத்துறையினர் கூறும்போது தொடர் மழையால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் ஆற்றைக் கடக்கும் முயன்ற போது வெள்ளத்தின் அடித்து வரப்பட்டு காட்டு யானை இறந்திருக்கலாம் என கூறியுள்ளார்.