வயநாடு நிலச்சரிவு…340க்கும் மேற்பட்டோர் பேர் பலி….!!!

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி கொட்டி தீர்த்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளிரவு வேளையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது அடுத்தடுத்து நிலச்சிரிவு ஏற்பட்டதில் பல நூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர். வீடுகள் இடிந்தும், மரங்கள் வேறோடு சாய்ந்தும் தொடர் கனமழை போன்ற காரணங்களால் மீட்பு பணிகள் இன்னும் முடிவுக்கு வராது சூழல் நிலவுகிறது.

இன்று நான்காம் நாளை எட்டிய மீட்பு பணிகளின் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 340-ஐ கடந்துள்ளது. மேலும் நிலச்சரிவில் புதைந்தவர்களை தேடுவதற்கு தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தெர்மல் ஸ்கேனர் கொண்டு தேடும் போது சேறு, சகதிகளில் யாரேனும் சிக்கியிருந்தால் அவர்களை அந்த ஸ்கேனர் காட்டி கொடுக்கும் என கூறப்படுகிறது. மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!