வயநாடு பகுதியை பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு….பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்…

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30-ந்தேதி அதிகாலை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட இடங்களில் வீடுகள் நிலச்சரிவால் இழுத்து செல்லப்பட்டன. இதில் சுமார் 400 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நிலச்சரிவால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியை பிரதமர் மோடி இன்று நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டரில் பறந்தவாறு ஆய்வு செய்தார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பள்ளி முகாமிற்கு சென்று, அங்குள்ளவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிஃப் முகமது கான், மத்திய மந்திரி சுரேஷ் கோபி ஆகியொர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். கேரள மாநில முதல்வரான பினராயி விஜயன் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடர் என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, வயநாடு செல்லும் பிரதமர் மோடி நிலச்சரிவு பாதிப்பை தேசிய பேரிடர் என அறிவிப்பார் என்று நம்புகிறேன் எனத் தெரிவித்தார் என கூறப்படுகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!