வயநாடு பாதிப்புகளை காண சென்ற கேரளா சுகாதார அமைச்சர்…விபத்தில் சிக்கினார் …!!!

கேரளாவில் பெய்த பருவமழையின் கோரத்தாண்டவத்தால் மலை கிராமங்கள் மண்ணில் புதைந்தன. வயநாட்டில் ஏற்பட்ட நிலசரிவில் சிக்கி 160 பேர் பலியானார்கள். மேலும் நிலச்சரிவில் சிக்கியுள்ள பலரின் கதி என்ன? என்பது தெரியாத நிலையில் ராணுவம் மீட்பு பணியில் இறங்கி உள்ளது. வயநாட்டில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் வயல் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை கேரளா சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் நேரில் காண சென்றபோது அவரது வாகனம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே விபத்துக்குள்ளானது. உடனே அவரை மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!