வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அங்கு பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கியிருக்கும் பலரை மீட்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கு 225 ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுகின்றன. இந்த நிலச்சரிவால் அடித்துச் செல்லப்பட்ட இடங்களில் தற்காலிக பாலம் அமைக்கும் பணியிலும் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வயநாட்டில் நிலச்சரிவில் 40க்கும் மேற்பட்டவர்கள் மண்ணுக்குள் புதைந்து இறந்துவிட்டன என கூறப்படுகிறது. இந்த நிலச்சரிவு அதிகாலை 2 மணிக்கு நடந்ததால் தூக்கத்திலே மண்ணில் புதைந்து உள்ளனர் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் 70-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கூறப்படுகிறது. மேலும் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.