கேரள மாநிலம் வயநாட்டில் மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் கிராமங்கள் முற்றிலும் சேதமடைந்து உள்ளன. இந்த நிலையில் தேடுதல் மற்றும் மீட்பு பணி கடைசி கட்டத்தை எட்டியுள்ளதாக கேரள மாநில முதல்வர் பிரனாயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரனாயி விஜயன் கூறுகையில் தற்போது வரை 215 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகள் எனக் கூறியுள்ளார்.
அவற்றின் 148 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்னும் 26 பேரை காணவில்லை எனவும் 81 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என கூறியுள்ளார். இதில் 67 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என கூறப்படுகிறது. இதற்கு பஞ்சாயத்து சார்பில் இறுதி சடங்கு நடத்தப்படும் என்றும் பாதுகாப்பான பகுதி கண்டறியப்பட்டு நகர்ப்புறம் உருவாக்கப்படும் எனவும் பிறனாயி விஜயன் தெரிவித்துள்ளார்.