சினிமா செய்திகள் தமிழ் சினிமா வாழை படத்தை பாராட்டிய நடிகர் தனுஷ்… வைரலாகும் பதிவு…!!! Sowmiya Balu23 August 2024077 views தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதனைதொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படத்தை இயக்கினார். தற்போது. இவர் ”வாழை” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயண இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தை பார்த்துவிட்டு நடிகர் தனுஷ், ”சிரிக்கவும், கைத்தட்டவும், அழகுவதற்கும் தயாராக இருங்கள். உங்களை கலங்கடிக்க செய்யும் உலகத்திற்குள் நுழைய தயாராக இருங்கள். உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடும் விதமாக இந்த படம் உருவாகியுள்ளது. மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்” என தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.