செய்திகள் தேசிய செய்திகள் விசித்திர திருடன்.. கலங்கவைக்கும் காரணம்…!!! Sathya Deva6 October 2024044 views பிரிட்டனில் திருடப் போன வீட்டில் கூட்டிப் பெருக்கி, சாப்பாடு சமைத்து, துணிதுவைத்து காயப்போட்டுவிட்டு தப்பிய பலே திருடன் பற்றிய உண்மை வெளிவந்துள்ளது. பிரிட்டனில் கார்டிப் [Cardiff] நகரில் தனியாக வசித்து வரும் பெண் ஒருவரின் வீட்டில் திருடுவதற்காக டாமியன் வோஜ்னிலோவிச் [Damian Wojnilowicz] என்ற 36 வயது திருடன் உள்ளே நுழைந்துள்ளான்.பெண் வீட்டில் இல்லாத சமயமாகப் பார்த்து நுழைந்த டாமியன், வீட்டில் சேர்ந்த குப்பைகளை அப்புறப்படுத்தி, சமையலறை, கழிவறையில் உள்ள பொருட்களைச் சீராக அடுக்கி வைத்து, கடையில் வாங்கி வைத்திருந்த பலசரக்கு பொருட்களை பிரிட்ஜில் அடுக்கி வைத்து , கூண்டில் உள்ள பறவைகளுக்கு உணவளித்து, வீட்டை துடைத்து, சமையல் செய்து, துணிகளைத் துவைத்து அதைக் காயப்போட்டு விட்டுச் சென்றுள்ளார். வீட்டை விட்டு வரும்போது, ‘டோன்ட் வொரி, பி ஹாப்பி, நன்றாக சாப்பிடுங்கள்’ என்று எழுதி வைத்துவிட்டும் வந்துள்ளார். வீட்டில் வசித்து வந்த அந்தப்பெண் திரும்பிவைத்தும் இதைப் பார்த்து அதிர்ந்துபோனார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தபின், திருடனின் வினோத செய்கையால் பயந்து தனது வீட்டில் வசிக்காமல் தோழி வீட்டில் தங்கியுள்ளார்.இந்த சம்பவம் ஜூலை 16 ஆம் தேதி நடந்த நிலையில் ஒருவாரம் கழித்து ஜூலை 26 ஆம் தேதி மற்றொரு வீட்டில் திருடும்போது டாமியன் பிடிபட்டுள்ளார். டாமியன் சிறுவயது முதலே தங்க வீடில்லாமல் பல கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளார் என்று அவரது வக்கீல் தெரிவித்தார். இதுதொடர்பாக தற்போது நீதிமன்றத்தில் அவர் மீது விசாரணை நடந்து வரும் வேலையில் இந்த விசித்திர திருடனின் கதை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.