Home சினிமா செய்திகள் “விடாமுயற்சி” படம் எப்படி இருக்கு? அஜித் கூறிய விமர்சனம்…மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!!

“விடாமுயற்சி” படம் எப்படி இருக்கு? அஜித் கூறிய விமர்சனம்…மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!!

by Sowmiya Balu
0 comment

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் ”விடாமுயற்சி”. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் சில போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், சமீபத்தில் விடாமுயற்சி படத்தை நடிகர் அஜித் பார்த்து தனது விமர்சனத்தை கூறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, அவர் இயக்குனர் மகிழ் திருமேனியிடம், ”படம் ஹாலிவுட் தரத்தில் வந்திருக்கிறது எனவும் என்னை மிகவும் இம்ப்ரஸ் செய்து விட்டது” எனவும் கூறியுள்ளதாக சூப்பர் தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.