சினிமா செய்திகள் தமிழ் சினிமா “விடுதலை2” ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது…? படக்குழு அறிவிப்பு…!!! Sowmiya Balu16 July 20240114 views பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீசான திரைப்படம் ‘விடுதலை’. இளையராஜா இசையமைத்திறந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் சேதுப,தி பவானி ஸ்ரீ, கௌதம் மேனன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இனைத்தொடர்ந்து, தற்போது ‘விடுதலை 2’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், மஞ்சுவாரியார் மற்றும் பலர் கூடுதலாக இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை ரிலீசாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.