விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்…எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது…!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்துள்ள பூமி கண்காணிப்பு செயற்கைகோள் இ.ஓ.எஸ்.08. இந்த செயற்கைகோளை சுமந்தப்படி எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.17 மணிக்கு திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்தது.

இந்த ராக்கெட் மூன்று நிலைகளைக் கொண்ட எரிபொருள் திட வகையை சேர்ந்ததாக கூறப்படுகிறது. இதன் ஒவ்வொரு நிலையும் ஒவ்வொரு பயன்பாட்டை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த செயற்கை கோள் பூமியிலிருந்து 475 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில் இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது என கூறினார். இந்த செயற்கைக்கோள் 24 மணி நேரமும் பூமியை கண்காணிக்கும் என்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக இரவிலும் துல்லியமாக படம் எடுக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!