Home செய்திகள்உலக செய்திகள் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்….பூமீ திரும்புவாரா…?

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்….பூமீ திரும்புவாரா…?

by Sathya Deva
0 comment

இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மற்றொரு வீரர் புட்ஸ் வில் மோர் ஆகியோர் கடந்த 5 ம் தேதி ஸ்டார் லைன் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் திட்டமிட்டபடி கடந்த மாதம் 22ஆம் தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைன் விண்கலத்தின் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவது சிக்கல் உருவானதாக நாசா விஞ்ஞானிகள் கூறி இருந்தனர். இந்த பிரச்சனையால் 50 நாட்களுக்கு மேலாக விண்வெளியில் சுனிதா வில்லியம் சிக்கியுள்ளார்.

இந்த போரின் ஸ்டார் லைன் விண்கலம் 210 நாட்கள் வரை விண்வெளியில் இருக்கக்கூடிய ஒரு விண்கலமாகும். பின்பு தானாகவே பூமிக்கு தரையிறங்கும் என கூறப்படுகிறது. இவர்கள் விண்வெளியில் இருந்து பூமி திரும்புவதுக்கான மூன்று சிக்கல்களை பற்றி முன்னாள் தளபதி ரூடி ரிடோல்ஃபி பேசியுள்ளார். பூமிக்கு விண்கலம் பாதுகாப்பாக இறங்குவதே உறுதி செய்ய ஸ்டார் லைன் சரியாக நிலை நிறுத்த பட வேண்டும் இல்லை என்றால் பல ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம் என்றும் தெரிவித்தார்.

அதில் 96 மணி நேர ஆக்சிஜன் விநியோகத்துடன் விண்வெளியில் விண்கலம் சிக்கிக் கொள்ளலாம். 2. விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் முயற்சி தோல்வியடையலாம்.விண்கலம் செங்குத்தான கோணத்தில் வளிமண்டலத்தில் நுழைந்தால் தரைப்பகுதியை அடைவதற்கு முன்பே தீப்பற்றி எரிந்து வீரர்கள் உயிரிழக்க நேரிடலாம் என்று தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.