வினேஷ் போகத்-ஐ மறந்து விடகூடாது… நீரஜ் சோப்ரா…!!!

பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட-ஐ எதிர்கொள்ள இருந்தார். ஆனால் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.இந்நிலையில், வினேஷ் போகத் குறித்து ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா பேசியுள்ளார்.

அதில், “வினேஷ் போகத் பதக்கம் வென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இப்படி ஒரு நிலை வராமல் இருந்திருந்தால் அவளுக்கு பதக்கம் கிடைத்திருக்கும். பதக்கம் வென்றவர்களை மக்கள் சில காலம் நினைவில் வைத்துக் கொண்டு அவர்களை சாம்பியன்கள் என்று கூறுவார்கள். ஆனால் பதக்கம் வெல்லாதவர்களை மக்கள் எளிதில் மறந்துவிடுவார்கள். ஆனால் வினேஷ் நம் நாட்டுக்காக செய்ததை நாம் மறந்துவிட கூடாது என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார் .

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!