Home செய்திகள்உலக செய்திகள் வினேஷ் போகத் தகுதி நீக்கம்…கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வேதனை…!!!

வினேஷ் போகத் தகுதி நீக்கம்…கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வேதனை…!!!

by Sathya Deva
0 comment

ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 63வது இடத்தில் உள்ளது. இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். ஆனால் திடீரென வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வேதனையுடன் தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்திற்கு ஏற்பட்ட துரதிஷ்டமான சம்பவம் வேதனை அளிக்கிறது என்றும் உங்களின் வலிமை, உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு தேசத்தை எப்போதும் ஊக்கப்படுத்தி உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் உங்களின் எண்ணற்ற சாதனைகள் இந்தியாவிற்கு நீங்கள் கொண்டு வந்த பெருமையை இந்த சம்பவம் மறக்கடித்து விடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உறுதியாக இருங்கள், நீங்கள் எப்போதும் எங்கள் சாம்பியனாக இருப்பீர்கள் என கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.